யாழ்.மாநகர காவல்படையின் சீருடை தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாம், சீருடையை ஒப்படைக்க பொலிஸார் பணிப்பு, அதிகாரிகளிடம் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர காவல்படையின் சீருடை தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாம், சீருடையை ஒப்படைக்க பொலிஸார் பணிப்பு, அதிகாரிகளிடம் விசாரணை..

யாழ்.மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல் படை தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்ததாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதாக கூறப்படும் நிலையில்,

குறித்த காவல்படை தொடர்பில் யாழ்.மாநகரசபை ஆணையாளர், பிரதான வருமான வரி பரிசோதகர் மற்றும் காவல்படையில் இணைக்கப்பட்ட இளைஞர்களிடம் 

யாழ்.பொலிஸ் நிலையத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மாநகருக்குள் சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதை உறுதிசெய்து

நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டதுடன் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த காவல்படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தினால் 

வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்பிற்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதுடன், விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Radio