யாழ்.மாநகரில் 75 வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் முடக்கப்படும்..! 2வது தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் அடிப்படையில் நாளை மேலும் சில வர்த்தக நிலையங்கள் முடக்கப்படலாம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் 75 வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் முடக்கப்படும்..! 2வது தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் அடிப்படையில் நாளை மேலும் சில வர்த்தக நிலையங்கள் முடக்கப்படலாம்.

யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியில் 75 வர்த்தக நிலையங்களை தொடந்தும் முடக்கி வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், 

ஸ்ரீ ஜெயவர்த்தபுர ஆய்வுகூடத்திற்கு அனுப்பபட்ட பீ.சி.ஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அதனை அடிப்படையாக கொண்டு மேலும் சில வர்த்தக நிலையங்கள் தொடந்தும் முடக்கப்படலாம். எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று காலை 54 பேருக்கு தொற்று உறுதியானதை அடிப்படையாக கொண்டு 75 வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை நேற்றய தினம் ஒரு தொகுதி பீ.சி.ஆர் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். 

அதேபோல் இன்று மாலை யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். எனவே இவற்றினடிப்படையில் மேலும் சில வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் முடக்கிவைத்திருக்கும்

தீர்மானம் நாளை எடுக்கப்படலாம். என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு