யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 13 பேர் உட்பட மாவட்டத்தில் 25 பேருக்கும், மாகாணத்தில் 29 பேருக்கும் தொற்று, விபரம் வெளியானது..
யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட மாகாணத்தில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும்,
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் யாழ்.மாவட்டத்தில் இன்று அடையாளம் காணப்பட்ட 25 தொற்றாளர்களில்
13 பேர் யாழ்.மாநகர முடக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.