யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மானத்தை துாக்கி எறிந்த இ.போ.ச..! மாநகர முடக்கம் தளர்த்தப்படும் முன் பேருந்து நிலையத்திலிருந்து சேவை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மானத்தை துாக்கி எறிந்த இ.போ.ச..! மாநகர முடக்கம் தளர்த்தப்படும் முன் பேருந்து நிலையத்திலிருந்து சேவை..

யாழ்.மாநகரம் கொரோனா தொற்று அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மாவட்ட கொவிட் செயலணியின் அறிவுறுத்தலையும் மீறி இ.போ.ச பேருந்து சேவை மீளவும் யாழ்.மாநகரின் மத்தியிலிருந்து சேவையை ஆரம்பித்துள்ளது. 

மாநகரில் கொரோனா தொற்று அபாயம் உருவான நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி நகரின் ஒரு பகுதி முடக்கப்பட்டதுடன், தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து செவைகள் நகரின் மத்தியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மாநகரின் முடக்கம் உத்தியோகபூர்வமாக தளர்த்தப்படாத நிலையில் இன்று காலை தொடக்கம் இ.போ.ச சேவைகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் மாவட்ட கொவிட் செயலணியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தமது எதிர்ப்பை காட்டியிருக்கின்றனர். ஆனாலும் மாநகரில் மக்கள் அதிகளவில் நடமாடும் வகையில் 

பேருந்து நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இன்றும் மாநகரில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்நடவடிக்கை பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு