யாழ்.போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடம் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்பு..! தொற்று நீக்கப்படுகிறது, விரைவில் திறக்கும் என்கிறார் பதில் பணிப்பாளர்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவுகள் இயங்காதிருப்பதால் பொதுமக்கள தாம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த ஒரு நாட்களில் சத்திர சிகிச்சை நலையங்கள் வழக்கம்போல் சேவைகளை ஆரம்பிக்கும் என பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீ.பவானந்தராஜா கூறியுள்ளார்.
போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடங்களின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்தும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சத்திர சிகிச்சை தொகுதியில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தினோம்.
எனினும் தற்போது சத்திரசிகிச்சை கூடங்களில் பணியாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
தற்போது சத்திரசிகிச்சை கூடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில் அதன் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பும் என அவர் மேலும் தெரிவித்தார்.