யாழ்.மாநகர வர்த்தகர்கள் காத்திருப்பு..! இரு தொகுதி பீ.சி.ஆர் மாதிரிகள் முல்லோியாவுக்கு.. ஒரு தொகுதி முடிவுகள் இன்று கிடைக்கும் என்கிறார் பணிப்பாளர்.
யாழ்.நவீன சந்தை முடக்கப்பட்ட பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் இதுவரை சேகரிக்கப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் முல்லோியா ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பட்டிருக்கின்றது.
அவற்றின் பரிசோதனை முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை. இரு தொகுதி பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு தொகுதி மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்.
என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ்.மாநகரில் ஒரு பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகள் பெருமளவு கிடைக்கவில்லை.
எனவும், முடக்கலில் இருந்து விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் வர்த்தகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடுக்கப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகள் குறித்து வினவியபோதே பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மாநகரில் முடக்கப்பட்டிருக்கும் பகுதி வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலைய பணியாளர்கள் அடங்கலாக சுமார் 1440 போிடம் பீ.சி.ஆர் மாதிரிகளை சேகரிக்கும் பணி நடக்கிறது.
அவற்றில் இதுவரை சேகரிக்கப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் இது தொகுதிகளாக முல்லோியா ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு தொகுதி முடிவுகள் இன்று இரவு அனுப்பபடும். என எதிர்பார்த்திருக்கிறோம்.
என பணிப்பாளர் கூறினார். இதேவேளை மாநகர வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலைய பணியாளர்களின் பூரணமான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்பே மாநகர முடக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கலாம்
என பணிப்பாளர் முன்னர் கூறியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.