யாழ்.பருத்துறை வைத்தியசாலையில் 4 பேர் உட்பட மாவட்டத்தில் 21 பேருக்கும், மாகாணத்தில் 22 பேருக்கும் தொற்று..! விபரம் வெளியானது, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை வைத்தியசாலையில் 4 பேர் உட்பட மாவட்டத்தில் 21 பேருக்கும், மாகாணத்தில் 22 பேருக்கும் தொற்று..! விபரம் வெளியானது, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 21 பேர் உட்பட வடக்கில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பருத்துறை வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வைத்தியசாலை ஊழியர் ஏனைய 3 பேரும் நோயாளர்கள். 

அதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சண்டிலிப்பாய் பகுதியில் இருவருக்கும், உடுவில் பகுதியில் ஒருவருக்கும், தெல்லிப்பழையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் சண்டிலிப்பாய், உடுவில் தெல்லிப்பழை 

பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 6 பேரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு