டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கோம்!! -வட கொரியா அதிரடி அறிவிப்பு-

ஜப்பானில் இவ்வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து தமது நாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்படி தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு ஏதும் இல்லை என வட கொரிய தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.