SuperTopAds

நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..! பீதி முடிவுக்கு வருகிறது, மாபியாக்கள் தலையில் இடி..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..! பீதி முடிவுக்கு வருகிறது, மாபியாக்கள் தலையில் இடி..

இலங்கைக்கு பாம் ஒயில் இறக்குமதியை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைசெய்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். 

ஜனாதியின் செயலாளரினால் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் இன்று திங்கட்கிழமை இவ்வாறு மரக்கறி எண்ணெய்யை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 

அதற்கமைய ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மரக்கறி எண்ணெய் விநியோகத்தை உடனடியாக நிறுத்தி வைக்க 

சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முற்றாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

அதற்கமைய இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி செயலாளரினால் ஏற்றுமதி, இறக்குமதி திணைக்களத்திற்கு 

நேற்று மாலை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரக்கறி எண்ணெய்யை விநியோகிக்காமல் இருப்பதற்கும் 

சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு முள்தேங்காய் உற்பத்திக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முள்தேங்காய் உற்பத்திக்கு தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார். 

அதற்கமைய இதுவரையில் பயிரடப்பட்டுள்ள முள்தேங்காய் செடிகளை கட்டம் கட்டமாக அகற்றி அவற்றுக்கு பதிலாக சூழலுக்கு ஏதுவான செடிகளை நாட்டுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

முள்தேங்காய் மற்றும் பாம் எண்ணெய் என்பவற்றின் பாவனையை முழுமையாக தடை செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.