SuperTopAds

யாழ்.மாநகரசபை உறுப்பினர், வங்கி ஊழியர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட இன்று மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று..! தொற்று விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினர், வங்கி ஊழியர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட இன்று மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று..! தொற்று விபரம் வெளியானது..

யாழ்.மாநகரசபை உறுப்பினர், வங்கி ஊழியர் உட்பட வடக்கில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள். 

குறித்த 8 போில் 4 பேர் பாற்பண்ணை கிராமத்தை செர்ந்தவர்கள், மேலும் 3 பேர் திருநெல்வேலியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். அதேபோல் கொக்குவில் பகுதியில் வங்கி ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவர், யாழ்.சிறைச்சாலையில் ஒருவர், யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அதேபோல் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உறுதுி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.  

மேலும் பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.