SuperTopAds

உடல் நடுங்கியது, பற்கள் இறுகின -ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள்-

ஆசிரியர் - Admin
உடல் நடுங்கியது, பற்கள் இறுகின -ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள்-

அக்காவின் உடல் அதிர்ந்து நடுங்கியது. அவரது பற்கள் இறுகின. ஏதோ சொல்ல முயற்சித்தார். நான் அக்கா.. அக்கா என்று கதறினேன் என ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள் குறித்து சசிகலா விபரித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்த விசாரணை ஆணைத்தில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவின் இறுதி தருணம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி பிற்பகல் 4.20மணியளவில் படுக்கையில் இருந்தவாறு தொலைக்காட்சியில் “ஜெய் வீர ஹனுமான்” தொடரை அக்கா பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணாடி அணிந்திருந்தார். அவர் கேட்டுக்கொண்டவாறு தாதியொருவர் காப்பி கொண்டு வந்தார். அப்போது நிகழ்ச்சி முடிந்து விட்டதால், ரிமோட் மூலம் தொலைக்காட்சியை அவர் அணைத்தார். தனது படுக்கைக்கு அருகே காப்பியை கொண்டு வருமாறு கூறினார்.

அப்போது அந்த அறையில் என்னுடன் ஒரு பெண் மருத்துவரும், ஒரு செவிலியரும் இருந்தனர்.

திடீரென்று அக்காவின் உடல் அதிர்ந்து நடுங்கியது. அவரது நாக்கு வெளியே ஒ ருபுறமாக தள்ளியது. அவரது பற்கள் இறுகின. அக்கா ஏதோ சொல்ல முயற்சித்தார். அவர் என்னையே பார்த்தவாறு இருந்தார்.

இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டினார். நான் ஓடிச்சென்று தாங்கிப் பிடித்தேன். மருத்துவர்கள் அறைக்குள் ஓடோடோடி வந்தனர். உடனடியாக அக்காவின் காதில் அவரை சத்தமாக கூறி அழைக்குமாறு மருத்துவர் தெரிவித்தார்.

நான் அக்கா.. அக்கா.. என்று உரக்கக் கத்தினேன். என்னைப் பார்த்தார். பின்னர் கண்களை மூடிக் கொண்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் என்னை அறையை விட்டு வெளியே சென்றிருக்குமாறு கூறினர் என குறிப்பிட்டுள்ளார்.