SuperTopAds

யாழ்.மாநகரம் புதன் அல்லது வியாழக்கிழமை முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுகிறதா..? மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரம் புதன் அல்லது வியாழக்கிழமை முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுகிறதா..? மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலைய  பணியாளர்களுக்கு 2ம் கட்டமாக நாளை காலை நவீன சந்தை பகுதியில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்நிலையில் குறித்த பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் முடக்கலை நீக்குவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.வணிகர்கழகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் யாழ்.மாநகரை முடக்கலில் இருந்து விலக்குமாறு கேட்டுவருகின்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக எடுக்கப்படபோகும் நடவடிக்கை தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பான கரிசனை எமக்கும் உள்ளது. ஆனால் சுகாதார பாதுகாப்பு நடைமுறை அனைவருக்கும் பொதுவானதாகும். 

அதில் எந்தவொரு நெகிழ்வு தன்மையையும் காட்ட முடியாத நிலையே காணப்படுகின்றது. எனவே நாளை யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள வர்த்கர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

குறித்த பரிசோதனை முடிவுகள் சாதகமாக அமையுமாக இருந்தால் புதன் அல்லது வியாழக்கிமைகளில் வர்த்தக நிலையங்களை திறப்பது குறித்து சாதகமாக பரிசீலிக்கலாம். என பணிப்பாளர் மேலும் தொிவித்திருக்கின்றார்.