தமிழகத்திற்குள் கடல்வழியாக நுழைந்த தமிழ் இளைஞர்கள் இருவர் கைது..! தீவிர விசாரணையில் தமிழக பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
தமிழகத்திற்குள் கடல்வழியாக நுழைந்த தமிழ் இளைஞர்கள் இருவர் கைது..! தீவிர விசாரணையில் தமிழக பொலிஸ்..

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு பைப்பர் படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்து இறங்கியதாக 

ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணையின்போதுகைதான இருவரும் மன்னார் மாவட்டம் கடம்பன்; பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஷ் என தெரியவந்துள்ளது. இவர்களை திண்டுக்கல் மாவட்டத்தின் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறி 

தமிழகத்திற்கு வரவழைத்தாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு