SuperTopAds

உலகின் மிகச்சிறிய கணினி கண்டுபிடிப்பு…!: படங்கள் உள்ளே

ஆசிரியர் - Admin
உலகின் மிகச்சிறிய கணினி கண்டுபிடிப்பு…!: படங்கள் உள்ளே

கணினி உற்பத்தியில் பிரபல நிறுவனமாக IBM நிறுவனம் காணப்படுகிறது. கணினி தொடர்பில் IBM நிறுவனமானது அவ்வப்போது பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் தற்போது உலகின் சிறிய கணினியை கண்டுபிடித்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இக்கணினியை இந்த ஆண்டு நடைபெறவுள்ள Think 2018 மாநாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக IBM நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனமானது தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 1 மில்லி மீற்றர் நீளமும், 1 மில்லி மீற்றர் அகலமும் கொண்ட சிறிய கணினியை கண்டுபிடித்துள்ளது.

 நம் கண்களுக்கு புலப்படாத அளவிலான டிரான்சிஸ்டர்களை கொண்டு இந்த கணினி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கணினியை உற்பத்தி செய்வதற்கான செலவும் மிகக் குறைவாகவே முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.