யாழ்.திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்தியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்தியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாகாண சுகாதார பணிப்பாளர்..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்றைய தினம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 921 பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அவர்களில் 4 பேர் பரமேஸ்வரா சந்தியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

அதிலும் 3 பேர் வர்த்தகர் என்பதுடன், மேலும் ஒருவர் பரமேஸ்வரா சந்தி குமாரசாமி வீதியை சேர்ந்த நபர் தனக்கு அறிகுறிகள் இருப்பதாக செய்துகொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் உள்ள யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பிரிவில் காவலாளியாக கடமையாற்றும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மேல் நீதிமன்றில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றும் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றுாழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், கண்டாவளை பகுதியில் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு