SuperTopAds

ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி!!

ஆசிரியர் - Editor II
ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி!!

டோக்கியோ ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பாட்டியாலாவில் கடந்த மாதம் நடந்த 24 ஆவது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்ற 313 பேருக்கு தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுமு. 

இவர்களில் 5 பேர் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்ததாகவும், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக அந்த ஆணையகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.