யாழ்.கல்வியங்காடு சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று PCR பரிசோதனையில் 2 வியாபாரிகளுக்கு தொற்று..! தொற்று விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று PCR பரிசோதனையில் 2 வியாபாரிகளுக்கு தொற்று..! தொற்று விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.கல்வியங்காடு சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் இரு வியாபாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யாழ்.நவீன சந்தையுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் சந்தை வியாபாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். 

என பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு