SuperTopAds

மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த கணவன்..! குடும்ப தகராறே காரணம் என தகவல்..

ஆசிரியர் - Editor I
மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த கணவன்..! குடும்ப தகராறே காரணம் என தகவல்..

குடும்ப தகராறினால் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த வீட்டில் கணவனும் மனைவியும் வசித்து வந்ததாகவும் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தொங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது. 

இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் குறித்த இரண்டு பேரின் சடலங்களும் தற்போது வீட்டினுள்ளேயே காணப்படுகின்றன.