SuperTopAds

காதலனை ஹீரோவாக்க முடிவு செய்துள்ள நயன்தாரா

ஆசிரியர் - Admin
காதலனை ஹீரோவாக்க முடிவு செய்துள்ள நயன்தாரா

நடிகை நயன்தாரா, தன் காதலர் விக்னேஷ் சிவனை ஹீரோ ரேஞ்சுக்கு மாற்றம் செய்யவுள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவரது காதல் உலகமே அறியும். இந்நிலையில் நடிகை நயன்தாரா, தன் காதலர் விக்னேஷை ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக இயக்குனர் 

எம்.ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா, இனி தனது காதலருக்கு யாரும் வாய்ப்பு தர வேண்டாம். சொந்தமாக நானே படம் தயாரிக்கிறேன்.

 அந்தப் படங்களை அவர் இயக்கினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் அவரை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு மாற்றம் செய்யவுள்ளார். இனிமேல் விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் நடிக்கவும் உள்ளார்.

விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளாராம். இந்த படத்தில் அவர்தான் நாயகியாக நடிக்கிறாராம்.