லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய கிராமசேவகர் கைது..! லஞ்ச ஊழல் தடுப்பு பொலிஸார் அதிரடி..

லஞ்சம் வாங்கியபோது கிராமசேவகர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் வவுனியா - கோவில்குளம் கிராமசேவகர் லஞ்சம் பெற்றதாக கிடைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்
லஞ்ச ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இதனடிப்படையில் குறித்த கிராமசேவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.