பொதுமக்கள் குறை அறிவதற்காக வடமாகாணம் வருகிறார் ஐனாதிபதி..!
மக்கள் குறை அறியும் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்காக ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்வரும் 3ம் திகதி ஐனாதிபதியாக தனது 1வது வடமாகாண விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின் கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சினைகளை நேரடியாக சென்று மக்களிடம் இருந்து அறிந்து கொள்ளும் முகமாக 'கிராமத்துடன் உரையாடல்' வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சி திட்டம் தென்பகுதியில் இடம்பெற்று வந்த நிலையில் முதன் முதலாக வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்றான கலாபோகஸ்வேவ கிராமத்திற்கு அவர் சென்று அப்பகுதி மக்களுடன் உரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் வடபகுதி நோக்கி இடம்பெறும் முதலாவது விஜயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.