SuperTopAds

படுக்கையை பகிரும் நடிகைகள் பட்டியலை வெளியிடுவேன்

ஆசிரியர் - Admin
படுக்கையை பகிரும் நடிகைகள் பட்டியலை வெளியிடுவேன்

சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். மேலும், பலர் நான் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளாரான ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சில நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் குறி வைப்பது திருமணமான ஆண்களைத் தான். இதன் விளைவாக பல குடும்பம் உடையும் நிலைக்கு வருகிறது. இது போன்ற நடிகைகள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள் என்று கூறியுள்ளார். இந்த நடிகைகளின் பட்டியல் தன்னிடம் தயாராக இருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிட இருப்பதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார். 

உங்கள் கணவருக்கு தான் அப்படி நடந்ததா? என்று பலரும் கேள்வி எழுப்ப, அந்த டுவிட்டரை நீக்கிவிட்டார். மேலும், எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வளவு சென்சிடிவ்வான ஒரு விஷயத்தை நான் பொழுதுபோக்காக செய்யவில்லை என்று கூறியுள்ளார்.