யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 3 ஆய்வுகூடங்களில் 1075 பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனை..! 29 பேருக்கே வடக்கில் தொற்று உறுதி, சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 3 ஆய்வுகூடங்களில் 1075 பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனை..! 29 பேருக்கே வடக்கில் தொற்று உறுதி, சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மாகாணத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்களில் 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர். 

அதேபோல் யாழ்.மாநகரில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலியில் 2 பேருக்கும், யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், 

உடுவில் பகுதியில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மேலும் கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும், 

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குமாக 22 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பரிசோதனை முடிவுகளில் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்கள் யாழ்.மாநகரை சேர்ந்தவர்கள். இதன்படி 29 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு