இந்திய லெஜண்ட்ஸ் அணியினருக்கு கொரோனா!! -இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் தனிமைப்படுத்தப்பட்டனர்-

ஆசிரியர் - Editor II
இந்திய லெஜண்ட்ஸ் அணியினருக்கு கொரோனா!! -இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் தனிமைப்படுத்தப்பட்டனர்-

சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் விளையாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவ்வணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் கலந்துகொள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த திலக்கரட்ண டில்சான், கௌசல்ய வீரரத்ன மற்றும் சிந்தக்க ஜயசிங்க ஆகியோர் அந்நாட்டில் உள்ள தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய இந்திய லெஜண்ட் அணியைச் சேர்ந்த 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இதுவரை அவ்வணியின் வீரர்கள் எவருக்கும் கொரோனா தொற்றோ அதற்கான அறிகுறிகளோ உள்ளமை கண்டறியப்பட்டிருக்கவில்லை என அவ்வணியின் முகாமையாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.


Radio