இந்திய மகளிர் ரி-20 அணி தலைவி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா!!
இந்திய மகளிர் ரி-20 அணி தலைவி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சல் இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.