SuperTopAds

1500 நாட்களை எட்டியது போராட்டம்!

ஆசிரியர் - Admin
1500 நாட்களை எட்டியது போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் நேற்று 1,500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் நேற்று மதியம் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர், அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டுச் சந்தியூடாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் கொட்டகையை வந்தடைந்தனர்.
இதன்போது, ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.