அவசரமாக கூடுகிறது யாழ்.மாவட்ட கொவிட்-19 தடுப்பு செயலணி..! திருநெல்வேலி சந்தை முடக்கல் நீடிக்குமா..? மேலும் சில பகுதி முடக்கப்படுமா?
யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு இன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தகட்டம் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி நாளை காலை அவரமாக கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி காலை 10 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர், படையினர், பொலிஸார், சுகாதார பிரிவினர் இணைப்பில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் அதிகளவான தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் திருநெல்வேலி பிரதேசத்தை தொடர்ந்து முடக்கலில் வைத்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆராய்வதுடன் அடுத்தகட்டம் எடுக்கப்படவேண்டிய மேல் நடவடிக்கைள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
மேலும் திருநெல்வேலி சந்தை தற்போது தற்காலிக முடக்கலில் உள்ள நிலையில் அந்த முடக்கல் தொடர்ந்து நீடிக்கப்படலாம் எனவும், சந்தையை சூழவுள்ள மேலும் பல வர்த்தக நிலையங்கள் முடக்கப்படலாம். எனவும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.