சி.எஸ்.கே அணியின் புதிய ஜெர்சியுடன் டோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், புதிய வடிவிலான ஜெர்சியுடன் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி இருக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
14 வது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆரம்பமாகி, மே 30 ஆம் திகதி முடிவடைகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டது.