இலங்கையில் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்படவுள்ளது..! அமைச்சரவைக்கு கோரிக்கை, மீன்பிடி அமைச்சும் ஒப்புதலாம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்படவுள்ளது..! அமைச்சரவைக்கு கோரிக்கை, மீன்பிடி அமைச்சும் ஒப்புதலாம்..

இலங்கையில் மண்ணெண்ணை விலையை 10 ரூபாயினால் அதிகாரிக்க ஒப்புதல்கோரி எரிசக்தி அமைச்சு அமைச்சரவையிடம் கோரியுள்ளது. 

மண்ணெண்ணெய் மானியத்தை திருப்பிச் செலுத்துவதற்கும், கச்சா எண்ணெய் மீதான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை திருத்துவதற்கும் 

பெப்ரவரி மாதம் எரிசக்தி அமைச்சகம் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தது.இதற்காக பொருத்தமான ஒரு பொறிமுறையை அமைக்க 

பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 8 ஆம் திகதி கூடி மண்ணெண்ணெய் விலையை 10% அதிகரிக்க முடிவு செய்தது. 

இதற்கு மீன்பிடி அமைச்சும் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாய். 10% அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், 

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ .77 ஆக உயரும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு