தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று மாலை 6.05 மணியளவில் மணிஒலி எழுப்பலுடன் ஆரம்பித்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து மாலை 6.07 மணியளவில் துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், ஒழுங்குபடுத்தப்பட்ட இடங்களிலும், பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரை ஏற்றியதையடுத்து, மாவீரர்களுக்காக நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் 3000 இற்கும் அதிகமான மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும், மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் முழங்காவில் துயிலுமில்லத்திலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
யாழ்ப்பாணத்தில், உடுத்துறை, சாட்டி துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை தீருவில் திடலிலும், கோப்பாய் துயிலுமில்லப்பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவில், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, அலம்பில், வன்னிவிளாங்குளம் துயிலுமில்லங்களில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.
மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லம் அருகிலும் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, கண்டலடி, துயிலுமில்லங்களிலும் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீர்ர் தினம்.
வடமராட்சி தீருவில் மாவீர்ர் துயிலும் இல்லத்த்தில் நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு.
உடுத்துறை மாவீர்ர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீர்ர் தின அனுஷ்டிப்பு.
திருகோணமலை மாவட்டத்தின் சிவன் கோவிலடியில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீருடன் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கொக்கட்டிச்சோலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு எழுச்சியுடன் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு பலநூறு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
விஸ்வமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மிக எழுச்சியுடன் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாகரை மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மிக எழுச்சியுடன் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகுந்த உணர்வுடன் மாவீரர்களுக்கு பல நூறு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.