மின்சார வசதியற்றோருக்கு இலவசமாக மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஆசிரியர் - Admin
மின்சார வசதியற்றோருக்கு இலவசமாக மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கேற்ப தேசத்திற்கு வெளிச்சம் எனும் தொனிப்பொருளில் மின்சார வசதியற்ற எல்லா சமுர்த்தி பயனாளிகளின் வீட்டிற்கும் இலவசமாக மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 219 சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்கப்படவுள்ளதுடன் வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கு வயரிங் வேலையை பூர்த்தி செய்த வசதியற்றவர்களுக்கு நான்கு வீத வட்டியில் இருபதாயிரம் ரூபா வரை கடன் வழங்கப்படவுள்ளதாக வாழைச்சேனை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் இராஜேந்திரன் கங்காதரன், வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகர் எச்.எம்.எம்.றியாழ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு