SuperTopAds

பெற்றோரின் கவனயீனம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
பெற்றோரின் கவனயீனம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் களுவாஞ்சிக்குடி - தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் உதயராஜ் ஹம்சவர்த்தினியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் வழமை போல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி 

தனது விளையாட்டுப்பொருள் கிணற்றில் விழ்ந்ததனைகண்டு அதனை தான் எடுக்க முற்பட்டபோது தவறுதலாக கிணற்றில் விழ்ந்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்துள்ளதாக அறிந்து கொண்ட குறித்த சிறுமியின் தகப்பனார் கிணற்றிலிருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த போதும், 

சிகிச்சையழிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.