ஒன் மேன் ஆர்மியாக களமாடிய டில்சான்!! -இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு வெறித்தனம் காட்டினார்-

ஆசிரியர் - Editor II
ஒன் மேன் ஆர்மியாக களமாடிய டில்சான்!! -இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு வெறித்தனம் காட்டினார்-

பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் ஒன் மேன் ஆர்மியாக திலகரத்ன டில்சான் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி ஜாம்பவான்களை வெளுத்து வாங்கியுள்ளார். 

வீதி பாதுகாப்பு உலக ரி-20 சம்பியன்சிப் போட்டிகள் தற்போது இந்தியாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இதில் நேற்றிரவு ராஜ்பூர் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் தலைமையிலான இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியினரும், இலங்கை லெஜண்ட் அணியினரும் மோதினர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகளையும் 3 ஓட்டங்களுக்குள் டில்சான் வீழ்த்தினார்.

தொடர்ந்தும் இலங்கை அணியின் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி சார்பில் ஜிம் ட்ராட்டன் 18 ஓட்டங்களையும், கிறிஸ் ட்ரெம்லெட் 22 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்சான் 4 விக்கெட்டுகளையும், ரங்கன ஹெரத் 2 விக்கெட்டுகளையும், கௌசல்ய வீரரத்ன, ரஸல் ஆர்னோல்ட் மற்றும் மஹாரூப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

79 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதில் டில்சான் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை எடுத்து அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு