ரி-20 போட்டிகளில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர்!! -விராட் கோலி புதிய சாதனை-

ரி-20 போட்டியில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 2 ஆவது ரி-20 போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
கோலி 3 ஆயிரம் ஓட்டங்களை எட்ட 72 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கோலி 73 ஓட்டங்களை பெற்றார். இதன்படி 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்டவீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
விராட் கோலி மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.