திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரிக்கு கடை அமைத்தவர், மருத்துவர், இராணுவ சிப்பாய், மீன் வியாபாரியகள் உட்பட 12 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரிக்கு கடை அமைத்தவர், மருத்துவர், இராணுவ சிப்பாய், மீன் வியாபாரியகள் உட்பட 12 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளான 12 போின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 409 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். 

அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கார்ஹில்ஸ் கட்டட தொகுதி பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது துணைவிக்கும் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு விசா விண்ணப்பித்த மாணவன். மற்றையவர் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 

சேர்க்கப்பட்ட பெண் ஒருவர். மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு 

தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரம் ஆலய மகா சிவாரத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி சீரமைப்புப் ணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு