14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று..! வடக்கில் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள மற்றொரு ஆடை தொழிச்சாலை..

வவுனியா - கண்டி வீதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாகக் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து
அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் சில நேற்றிரவு வெளியாகிய நிலையில் 7 பேருக்குக்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்துடன், வவுனியா புதிய பஸ் நிலையத்திலுள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவருக்கும்
பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி வவுனியாவில் நேற்று 8 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா, கண்டி வீதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்த 14 பேர் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.