SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் கருவாட்டு கடைக்காரர், இ.போ.ச பணியாளர்கள், இராணுவ சிப்பாய் உட்பட 20 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கருவாட்டு கடைக்காரர், இ.போ.ச பணியாளர்கள், இராணுவ சிப்பாய் உட்பட 20 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான நபர் நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் செட்டிகுளம் வைத்தியசாலையில் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

ஏனைய 3 பேரும் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு தொற்று உறுதுி செய்யப்பட்டள்ளது. அவர்களில் 5 பேர் யாழ்.சிறைச்சாலை கைதிகளாவர். மேலும் 3 பேர் ஊர்காவற்றுறை - மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்தவர்களாவர். 

இதேபோல் காரைநகர் இ.போ. ச சாலை பணியாளர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.மாநகருக்குள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்.பல்கலைகழக ஒழுக்காற்று

அதிகாரியின் குடும்பத்தினர் இருவரும், யாழ்.நகரில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவருக்கும், யாழ்.நகரில் கருவாட்டு கடை நடத்தும் ஒருவருக்குமாக 4 பேரக்கும், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 

3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மருத்துவபீட சிற்றுாழியர் மற்றய இருவரும் கோண்டாவிலில் உள்ள இ.போ.ச தலமையக ஊழியர்களாவர். மேலும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளான இலங்கை வங்கி பணியாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.