29 வயதான கர்ப்பவதி பெண் மற்றும் யாழ்.பல்கலைகழக மார்ஸல் உட்பட வடக்கில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் விபரம் வெளியானது..!
யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இவர்களில் 6 பேர் நேற்றய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவுமு் ஏனையோர் நேற்று காரைநகரில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபரி குடும்பத்தினர்களாவர்.
மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ளவர். இதேபோல் யாழ்.சிறைச்சாலை கைதி ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 16 பேருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தையில் கண்டறியப்பட்டுள்ளனர். மன்னார் மீன் சந்தை தொழிலாளி ஒருவர் தொடருந்துடன் மோதி உயிரிழந்த நிலையில்
அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனால் மன்னார் மீன் சந்தையில் இன்று எழுமாற்றாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிதி நிறுவனமான கொமர்ஷல் கிறடிட்டின் மன்னார் கிளையில் பணியாற்றும் சிலருக்கு தொற்று உள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டது. அங்கு பணியாற்றும் மேலும் இருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகர் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணுக்கு
கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.