தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் சர்வதேச அளவில் மாநாடு..! முன்னாள் ஜ.நா நவநீதம் பிள்ளையும் கலந்து கொள்கிறார்..

ஆசிரியர் - Editor I
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் சர்வதேச அளவில் மாநாடு..! முன்னாள் ஜ.நா நவநீதம் பிள்ளையும் கலந்து கொள்கிறார்..

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் அடுத்த வாரம் சர்வதேச அளவில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இம்மாநாட்டில் முன்னாள் ஜநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்நவநீதம்பிள்ளை உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற 

அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டலுடனான காணொளி கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர் இச்சந்திப்பிற்கென அனைத்துமட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டல் கருத்து தெரிவிக்கையில். யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள்ஆகியுள்ளபோதிலும் வடக்கில் இன்னமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார்காணிகளை 

இராணுவம் தன்வசம் வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தமது ஆய்வறிக்கை அமெரிக்க அரசிற்கும் ஜ.நா ஆணையாளரிற்கும்கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்ததுடன் 

இணை அனுசரணை நாடுகளிற்கும்வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.ஆயினும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமது போராட்டத்தை தமிழ் மக்கள்தொடரவேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் தமது பணியை தளரவிடாது

முன்னெடுக்கவும் கோரியிருந்தார்.பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியின் வெற்றியானது சர்வதேசத்திற்கு தமிழ்மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்த அனுராதாமிட்டல் அதனை முன்னின்று செயற்படுத்தியவர்கள் 

பாராட்டுக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் வேலன் சுவாமிகள் மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு