வாழ்க்கையில் நேரத்தை மதிக்க பழகுகிறவர்களே சாதனையாளர்கள்..! இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ஜெயக்குமார்..

ஆசிரியர் - Editor I
வாழ்க்கையில் நேரத்தை மதிக்க பழகுகிறவர்களே சாதனையாளர்கள்..! இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ஜெயக்குமார்..

எவன் ஒருவன் வாழ்க்கையின் நேரத்தை மதிக்கப்பழகுகின்றானே அவன் உண்மையாகவே ஒரு சாதனையாளனாக வருவான் என இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார் தெரிவித்தார்.

சில்லாலை பங்கின் கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய சில்லாலை, சங்கானை, மூளாய் ஆகிய ஆலயங்கள் இணைந்த சில்லாலைப பங்கினைச் சேர்ந்த 

மூவரை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை சில்லையில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையை நேசிக்கவேண்டும். அத்தகைய வாழ்க்கையை உண்மையாகவே நேசிப்பீர்களானால் நேரத்தை மதியுங்கள் எவன் ஒருவன் வாழ்க்கையின் நேரத்தை மதிக்கப்பழகுகின்றானே

அவன் உண்மையாகவே ஒரு சாதனையாளனாக வருவான் ஒருவன் பணக்காரனாக இருக்கிறானே அவனால் நேரத்தை வாங்கமுடியாது இழந்தபோன நேரத்தை திருப்பிப் பெறமுடியாது இந்த நேரத்தை வீணாக்காதீர்கள். 

இளைஞர் யுவதிகளே உங்கள் காலம் பொன்னானது நீங்கள் ஒரு லட்சியத்துடன் பயணிக்க வேண்டும் . ஏதோ நான் பிறந்து விட்டேன் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று எண்ணக்கூடாது வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்ற ஒரு லட்சியம் வேண்டும்.

இதற்காக நேரத்தை கணக்கிடவேண்டும் முகாமைப்படுத்தல் வேண்டும் திட்டமிடல் வேண்டும். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள் நேரம் பொன்னனது இதனை நல்ல விதத்தில் பயண்படுத்துங்கள்.

நீங்கள் ஒன்றை அறியவேண்டும் என்றால் அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தடைகள் முட்டுக்கட்டைகள் வரலாம் அவற்றை எதிர்மறையாக மாற்றுகின்ற தன்மையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். 

இதில் தான் ஒவ்வொருவருடைய ஆளுமை தங்கியுள்ளது என்றார்.இந்நிகழ்வில்க லந்துகொண்ட கதிரைமாதா ஆலய பங்குத்தந்தை அருட் தந்தை பாலதாஸ் பிறையன் உரையாற்றுகையில்நாம் எவ்வளவு தூரம் கல்வியில் உயர்ந்திருந்தாலும் 

அவ்வளவு தூரம் பணியாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. பதவிகள் கொடுக்கப்படுவதாக நினைக்கின்றோம் அவை பதவிகள் அல்ல பட்டங்கள் கொடுக்கப்படுவதாக நினைக்கின்றோம் அவை பட்டங்கள் அல்ல இவை மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே கிடைக்கின்றது. 

இவற்றைக் கொண்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டும். அதுமட்டுமன்றி இன்னும் பல உயர்வுகளை பெற்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு