யாழ்.போதனா வைத்தியசாலையில் சகல சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது..! மக்கள் பீதியடையதேவையில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சகல சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது..! மக்கள் பீதியடையதேவையில்லை..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சகல சிகிச்சைகளும் வழக்கம்போல் நடப்பதாக கூறியுள்ள பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநதி பவானந்தராஜா, போதனா வைத்தியசாலைக்குள் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில். யாழ்.போதனா வைத்தியசாலை நிபுணர் ஒருவருக்கும் சில ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 

சில வைத்திய சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்த்து எனினும் தொற்று நீக்கல் செய்த பிற்பாடு அனைத்து சிகிச்சை முறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான வைத்தியரும் சிகிச்சை முடித்து ஒய்வில் உள்ளார் அடுத்தவாரம் 

மீண்டும் தனது கடமைகளை மேற்கொள்ளவுள்ளார். அதேவேளை ஏற்கனவே நாம் அறிவித்தது போல நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கே அனுமதி வழங்கப்பட்டது.  இந்த நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 

இன்னும் பார்வையாளர்கள் பார்வையிட வருவதை தவிர்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. எவ்வளவு தூரத்திற்கு பார்வையாளர் வருவதை தவிர்க்க முடியுமோ அவ்வளவிற்கு வைத்திய சாலைக்கும் எமது சமுகத்திற்கும் செய்யும் நன்மையாகும். 

தற்போழுது தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுப்பான விடுதி மேற்பார்வையாளர். 

அல்லது பொறுப்பான வைத்தியரிடம் தெரிவித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும்.மேலும் கொரோனா தொற்றை தவிப்பதற்காக ஒரு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு யாழ்போதனா வைத்தியசாலையின் ஒவ்வோரு 

செயற்பாடுகளைநும் அவதானித்து நோய்தாக்கம் ஏற்படாது தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை அந்த குழு மேற்கொள்ளும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு