இனங்களுக்கிடையில் முறுகலை உண்டாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றிய முதியவர் கைது..!

ஆசிரியர் - Editor I
இனங்களுக்கிடையில் முறுகலை உண்டாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றிய முதியவர் கைது..!

இன முறுகலை உண்டாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றிய நபர் குற்றப்புலனாய்வு பிரிவினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

53 வயதான குறித்த நபர் கடந்த மார்ச் 4 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் முகப்புத்தகத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருந்ததாக அஜித் ரோஹன கூறினார்.

சந்தேகநபர் ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் புகைப்படங்களுடன் மேலும் சிலரின் புகைப்படங்களை உள்ளடக்கி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டையும் கருத்து மோதலையும் ஏற்படுத்தும் விதத்தில் புகைப்படங்களை பதிவேற்றியதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு