தடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா?
விஜய் படத்திற்காக ஐதராபாத்தில் இருந்து கலைஞர்கள் பலர் சென்னை வந்து பணிபுரிந்து வருகின்றனர். அதற்காக முறைப்படி அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், தடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா, என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
பட அதிபர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது.
புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு தடையை மீறி நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் பட ஷுட்டிங் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ஆடியோ வடிவில் விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பு நிறுத்தம் குறித்து கூட்டம் நடத்தப்பட்ட போது, எந்த தயாரிப்பாளராவது ஒன்று, இரண்டு நாட்கள் அனுமதி கேட்டால், விவாதித்து அனுமதி அளிக்க முடிவு செய்திருந்தோம்.
விஜய் படத்திற்காக ஐதராபாத்தில் இருந்து கலைஞர்கள் பலர் சென்னை வந்து பணிபுரிந்து வருகின்றனர். அதற்காக முறைப்படி அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளோம்.