உரும்பிராய் சிவன் வீதி காப்பெற் வீதியாக மாறுகிறது..! இன்று பணிகள் ஆரம்பம்..

மிக நீண்டகாலம் புனரமைப்பு செய்யப்படாமலிருந்த உரும்பிராய் - சிவன் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு காப்பெற் வீதியாக மாற்றப்படுகின்றது.
குறித்த வீதியின் புனரமைப்பு தொடர்பாக பிரதேச மக்களின் குரல் கொடுத்துவந்த நிலையில் சுமார் 800 மீற்றர் நீளமான வீதியை புனரமைத்து காப்பெற் வீதியாக
மாற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.