யாழ்.செம்மணி மயானத்திலிருந்து 5 கிலோ C4 மற்றும் TNT வெடிபொருட்கள் மீட்பு..!

யாழ்.செம்மணி மயானத்திலிருந்து சுமார் 5 கிலோ கிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
செம்மணி மயானத்தில் வெடிபொருட்கள் காணப்படுவதாக இன்று அதிகாலை தொடக்கம் விசேட அதிரடிப்படையினர், இராணுவம் குவிக்கப்பட்டு
பாரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன்போது பை ஒன்றில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.
குறித்த பொதியில் இருந்து 3 கிலோ 750 மில்லி கிராம் சி4 வெடிமருந்து மற்றும் ரி.என்.ரி வெடிமருந்து ஆகியனவும் டெட்டனேட்டர்கள்,
வெடிப்பி வயர்கள ஆகியன யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.