யாழ்.பருத்துறையில் இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு முயற்சி..! மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது..

பருத்துறை கற்கோவளம் பகுதியில் 3 குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
16வது காலாற்படையினரின் தேவைக்காக குறித்த காணியை இன்று காலை 9 மணிக்கு சுவீகரிப்பிற்காக அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட்டு எதிர்ப்பு தொிவித்த நிலையில்,
அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பருத்துறை பிரதேச செயலர் அறிவித்திருக்கிறார்.