என்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள்..! பல லட்சம் பணத்தையும் செலவிடுகிறார்கள்..
யாழ்.மாநகர முதல்வர் பதவியிலிருந்து என்னை அகற்றவேண்டும். என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள். என குற்றஞ்சாட்டியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பல லட்சம் பணத்தை செலவிட்டுள்ளதாகவும் கூறினார்.
சமகால நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள்
என கூறிய ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் சிலர் என்னை யாழ்.மாநகர முதல்வர் பதவியில் இருந்து அகற்றவேண்டும். என துடிக்கிறார்கள். அவர்களே யாழ்.மாநகர செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கும் மாநகரசபையை ராஜபக்ஸக்களிடம் கொடுப்பதும் அவர்களின் திட்டம்.
இதன் ஓர் அங்கமாக எனக்கு ஆதரவான யாழ்.மாநகரசபை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் செயற்பாடு இடம்பெற்றது. முதல்வர் பதவி இழப்பாராயின் மாநகர சபை செயலற்றுப் போகும் என கருதி என் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்காக
சுமார் 50 லட்சத்துக்கு அதிகமான தொகையை ராஜபக்ஷக்களின் விசுவாசிகள் செலவு செய்ததாக நான் அறிகிறேன். வழக்குகள் மூலம் என்னை பதவியிலிருந்து அகற்றி யாழ்.மாநகர சபையை வலுவிழந்ததாக மத்திக்கு தாரைவார்க்கும் ஏற்பாடுகள்
முழுவீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தையும் மத்திக்குத் தாரைவார்க்கலாம் என சில தரப்புகள் கங்கணம் கட்டியுள்ளன. ஆகவே யாழ்.மாநகரத்தின் தனித்துவத்தை பாதுகாத்து எமக்கு வழங்கப்பட்ட குறுகிய காலத்தில்
மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.