நாயாற்று கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்த நிலையில் காணாமல்போனவர் சடலமாக மீட்கப்பட்டார்..!

முல்லைத்தீவு - நாயாறு கடலில் குளிக்க சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
நாயாறு கடலில் 4 பேர் குளிப்பதற்கு சென்ற நிலையில் நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் 3 பேர் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் காணாமல்போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர். என கூறப்படுகின்றது.