ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட்!! -ஏப்ரல் 9 ஆம் திகதி ஆரம்பம்-

ஜ.பி.எல் தொடரின் 14 ஆது சீசன் கிரிக்கெட் போட்டியை அடுத்த மாதம் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதி வரை நடத்த உத்தேச அளவில் முடிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் போட்டிக்கான இடங்கள் மற்றும் திகதிகளை இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடைபெறும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.