அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் இன்று 8 ஜனாசாக்கள் நல்லடக்கம்..! 2 நாட்களில் 16 ஜனாசாக்கள் நல்லடக்கம்..
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 8 பேருடைய ஜனாசாக்கள் 2ம் நாளான இன்றும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களைஅடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர்பிரிவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின்
பதினாறு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாக சுகாதார திணைக்களத்தின்தெரிவித்தனர். கொரோனா தொற்று மூலம் மரணித்தஜனாஸாக்களில் நேற்று வெள்ளிக்கிழமை
கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம்செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த ஐந்துஜனாசாக்களும்,
நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமான ஏழுஜனாசாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மூலம்மரணித்தவர்களின் உடல்;களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரில்பாதுகாப்பில் உள்ளதுடன்,
ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.